இந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்?

இந்து மறபில்‌ ஞானிகள்‌ வெவ்வேறு காலங்களிள்‌, வெவ்வேரு ஊர்களில்‌, வெவ்வேறு சூழ்நிலைகளில்‌ தோன்றி வருகிறார்கள்‌. இது இந்து மறபின்‌ தனிச் சிறப்பு. ஞானிகள் காலத்திற்க்கும்‌ ஊருக்கும்‌ சூழ்நிலைக்கும்‌ தகுந்த மாதிரி புதிய கருத்தும்‌, புதிய விளக்கங்களும்‌ அளித்து வருகிறார்கள்‌.  ஞானிகள்‌ இப்படி ஒரே சீராக தொடர்ச்சியாக தோன்றுகிறார்கள்‌ என்றால்‌, அதற்கு மூலம்‌ வேதத்தில்‌ உள்‌ள சச்சித்தானந்தம்‌ என்னும்‌ தத்துவம்‌ தான்‌.  “பீயிங் டிப்ரெண்ட்” என்ற ஆங்கில புத்தகத்தில்‌ நான்‌ இது குறித்து எழுதியிருக்கிறேன்‌.

மேலை நாட்டு சிந்தனையில்‌ “ரிலிஜியன்‌ ஆப் தி புக்‌” என்று ஒரு சொற்றொடர்‌ உண்டு.  “ரிலிஜியன்‌” என்றால்‌ மதம்‌ அல்லது சமயம்‌, “புக்‌” என்றால்‌ புத்தகம்‌,  “ரிலிஜியன்‌ ஆப் தி புக்‌” என்றால்‌ ஒரு புநித புத்தகத்தை அடிப்படையாக வைத்து கொண்டு, அந்த அடிப்படையின்‌ மேல்‌ கட்டப்பட்ட மதம்‌ அல்லது சமயம்‌.  (அப்படிப்பட்ட மதத்தில்‌ ஞானிகள்‌ முக்கியம்‌ அல்ல). “ரிலிஜியன்‌ ஆப் தி புக்கில்‌” ஒரு பலவீனம்‌ உண்டு.  அந்த புனித புத்தகத்தை பற்ற வைத்தால்‌, அல்லது அந்த புனித புத்தகத்தை வெளியில்‌ கொண்டு வரமுடியாத படி சட்டபூர்வமாக தடை செய்தால்‌, அந்த “ரிலிஜியன்‌ ஆப் தி புக்‌” அழிந்து விடும்‌.  ஆனால்‌ இந்து மரபை அழிக்க முயற்சி நடக்கும்‌ போதெல்லாம்‌ ஞானிகள்‌ இந்து மறபில்‌ மறு மலற்ச்சியை கொண்டு வந்தார்கள்‌.  நாட்டில்‌ ஞானிகளின்‌ பெயரின்‌ மேல்‌ மரியாதை உண்டு, அதனால்‌ ஞானிகள்‌ தோன்றும்‌ வரை, நமது இந்து மரபு நன்றாக வளரும்‌.

இந்து மரபுகளுக்கு குழி தோண்டும்‌ அணிகள்‌ இதனால்‌ தான்‌ ஞானிகளை கடுமையாக தாக்குகிறார்கள்‌.

ஞானிகளின்‌ மேல்‌ கடுமையான தாக்குதல்கள்‌ இந்தியாவிலும்‌ வெளி நாடுகளிலும்‌ நடந்து வருகிண்றன.  அமெரிக்காவில்‌ அதிகாரிகள்‌ ஓஷோ அவர்களின்‌ மேல்‌ கொலை போல்‌ பெரிய குற்றங்கள்‌ கொண்ட ஒரு குற்றச்சாட்டை  தாக்கல்‌ செய்திருக்கிறார்கள்‌. சுவாமி முக்தானந்தர்‌ உடலை விட்டு பிரிந்து பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு புகார்‌ கொண்டு வந்தார்கள்‌, பெண்‌ விஷயத்தில்‌ முக்தானந்தர்‌ நடத்தை சரி இல்லை என்று.  வருத்த பட வேண்டிய விஷயம்‌ என்னவென்றால்‌, இந்த புகாரை கொண்டு வந்தவர்கள்‌ முக்தாநந்தர்‌ இருக்கும்‌ போது அவரிடம்‌ மிகுந்த விசுவாசம்‌ உள்ள பெண்‌ பக்தர்கள்‌ தான்‌.  சுவாமி பிரபுபாதர்‌ இஸ்கான்‌ என்று ஒரு அமைப்பை ஆரம்பித்தார்‌.  பிரபுபாதர்‌ உடலை விட்டு பிரிந்த பிறகு அதே இஸ்கானின்‌ மேல்‌ ஒரு வழக்கை நடத்தினார்கள்‌, அந்த அமைப்பில்‌ பெண்களை அசிங்கமாக தொந்தரவு செய்கிறார்கள்‌ என்று.  யோகி அமிருத தேசாயின்‌ மேல்‌ கிட்டத்தட்ட இதே குற்றங்களை சாட்டி, அவரை “கிருபாலு ஸென்டெர்‌” என்ற அமைப்பிலிருந்து திடீரென தூக்கினார்கள்‌. இத்தனைக்கும்‌ அமிருத தேசாய்‌ 1970-1979 காலம்‌ முதல்‌ கணக்கில்லாத அமெரிக்காவாசிகளுக்கு யோகா சொல்லி கொடுத்து வருகிறார்‌. அந்த “கிருபாலு ஸென்டெர்‌” கூட அவர்‌ ஆரம்பித்த அமைப்பு தான்‌.  மஹரிஷி மஹேஷ்‌ யோகி வெற்‌றியின்‌ உச்சியில்‌ இருக்கும்‌ போது, அவரை கவிழ்க்க முயற்சி செய்தார்கள்‌.  82 வயசான சுவாமி பிரகாசானந்த சரஸ்வதியின்‌ மேல்‌ ஒரு குற்‌றச்சாட்டை அமெரிக்காவில்‌ கொண்டு வந்தார்கள்‌, அவர்‌ குழந்தைகளை தப்பான முறையில்‌ தொட்டார்‌ என்று.  குற்‌றம்‌ சாட்டுபவர்கள்‌ இந்த குற்‌றம்‌ பத்து வருடங்கள்ளுக்கு முன்னாடி நடந்ததாக சொன்னார்கள்‌.  ஏன்‌ பத்து வருடங்கள்‌ சும்மா இருந்தார்கள்‌ என்று ஆச்சரியமாக இருக்கிறது.  எதிர்‌ கட்சியின்‌ வழக்கறிஞர்‌ வீடியோவில்‌ பதிவு செய்த சாட்சியம்‌ எல்லாம்‌ காணோம்‌ என்று கூச்ச படாமல்‌ சொன்னார்‌.  இதெல்லாம்‌ பார்த்தும்‌ தீர்ப்பு தீர்மானிக்க வேண்டியவர்கள்‌ “பிரகாசானந்தர்‌ அபராதி தான்‌” என்ற தீர்ப்பை தீர்மானித்தார்கள்‌.  50 வருடங்கள்‌ சிறை தண்டனை உள்ள குற்‌றத்திற்க்கு  50 தே நிமிடங்கள்‌ யோசனை செய்துவிட்டு இந்த தீர்ப்பை தீர்மானித்தார்கள்‌.

ஞானிகளை ஈவு இரக்கம்‌ இன்றி பாடு படுத்துவதை இந்தியவிலும்‌ கொண்டு வந்தார்கள்‌.  காஞ்சி சங்கராசார்யர்களின்‌ மேல்‌ ஆதாரமற்‌ற கொலை குற்‌ற்ச்சாட்டு போட்டதை நாம்‌ நேரில்‌ பார்திருக்கிரோம்‌.  அந்த குற்‌றச்சாட்டு ஆதாரமற்‌றது என்று நிருபிக்க முடிந்தது, ஆனால்‌ அதற்குள்‌ ஊடகங்கள்‌ அல்லும்‌ பகலும்‌ வேலை செய்து சங்கராசார்யர்கள்‌ பெயரின்‌ மேல்‌ புழுதியைத் தூற்றினர்கள். சங்கராசார்யர்கள்‌ நிரபராதி என்ற தீர்ப்பு வந்த பிறகு ஊடகங்கள்‌ மன்னிப்பு கேட்கவில்லை.  அப்படி இருக்கும்‌ போது, சங்கராசார்யர்களின்‌ பெயரை முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வருமா இந்த ஊடகங்கள்‌?

சுவாமி நித்யானந்தரின்‌ மேல்‌ சாட்டப்பட்ட குற்‌றங்கள்‌ ஆதாரமற்‌றவை என்று சாட்சியங்கள்‌ இருக்கின்றன, இருந்தாலும்‌ அவரை பற்‌றி பாரபட்சம்‌ இல்லாத செய்திகள்‌ ஏதோ ஒன்றிரண்டு தான்‌ வருகின்றன. நான்‌ அவரிடம் பெங்கலூர்‌ அருகில்‌ பிடாதியிலும்‌ வாராணசியிலும்‌ தியானம்‌ கற்றிருக்கிறேன். அவர் மூலமாக ஆயிரக்கணக்கான பேருக்கு பலன்‌ கிடைத்திருக்கிறது என்று நான்‌ நேரில்‌ பார்த்திருக்கிறேன். அவர்‌ சீடர்களில்‌ பலர்‌ பெரிய படிப்பு படித்தவர்கள்‌. இளைஞர்கள்‌.  தங்கள்‌ உரிமைகளை நன்றாக தெரிந்தவர்கள். துணிச்சல்‌ உள்‌ளவர்கள்‌. ஆண்களும்‌ சரி, பெண்களும்‌ சரி. அப்படிபட்டவர்கள்‌ லேசில்‌ ஏமாற மாட்டார்கள்‌.  ஏதாவது தப்பு நடந்தால்‌ அந்த தப்பை பார்த்தும்‌ பார்க்காத மாதிரி போக மாட்டார்கள்‌.

ஒரு ஒய்வு பெற்‌ற மன நோய்‌ மருத்துவர்‌ மூலமாக நான்‌ சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன.  அந்த மன நோய் மருத்துவர்‌ என்‌ கட்டுரைகளை பல வருடங்களாக நன்றாக படித்து வந்திருந்தார்‌.  போக போக எனக்கும்‌ அவர்‌ மேல்‌ நம்பிக்கை முளைத்தது.  (இருந்தாலும்‌ நான்‌ ஒரு விஷயத்தை கவநித்தேன்: அந்த மன நொய்‌ மருத்துவருக்கு நித்யானந்தரின்‌ அமைப்பில்‌ ஒரு பெரிய பதவியை பெற பேராசை இருந்தது.)  அவர நித்யானந்தரை பற்‌றி குற்‌றம்‌ சொல்ல ஆரம்பித்தார்‌.  நான்‌ அவர்‌ சொன்ன விடயங்களை முதலில்‌ நம்பினேன்‌.  பிறகு எனக்கு தெறிய வந்தது, அவருக்கு நித்யானந்தரின்‌ அமைப்பில்‌ பெரிய பதவி கிடைக்கவில்லை என்று.  அந்த ஏமாற்‌றத்தில்‌ அவர்‌ நித்யானந்தருக்கு ஒரு கடுமையான எதிரியாகிவிட்டார்‌.

அப்போதிலிருந்து நான்‌ விவரங்களை தனிப்பட்ட முறையில்‌ கண்டு பிடிக்க பார்த்தேன். நித்யானந்தரின்‌ அமைப்பில்‌ இருக்கும்‌ பெண்களிடம்‌ குற்‌றச்சாட்டை பற்‌றி சந்தேகம்‌ கேட்டேன்‌. அந்த பெண்கள்‌ படித்தவர்கள்‌,  துணிச்சல்‌ உள்‌ளவர்கள்‌. குற்‌றச்சாட்டில்‌ ஆதாரம்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌ அவர்கள்‌ நித்யானந்தரிடம் விசுவாசமாக இருந்திருக்க மாட்டார்கள்‌.  நான்‌ வழக்கில்‌ இருக்கும்‌ சாட்சியங்களை அலசி பார்த்தேன்‌.  சட்டத்தை பற்‌றி விடயம்‌ தெறிந்தவர்கள்‌ உதவி செய்தார்கள்‌. இந்த வழக்கு அரசியல்‌ நோக்கத்தில்‌ தான்‌ போட்டிருந்தார்கள்‌ என்று பட்டது.  எனக்கு உதவி செய்தவர்களில்‌ ஒருத்தருக்கு “பாரபட்சம்‌ இல்லாதவர்‌” என்று ஊரில்‌ நல்ல பெயர்‌ இருந்தது.  அவர்‌ என்னிடம்‌ சொன்னார்‌, ஆதாரம்‌ இல்லாவிட்டாலும்‌ நித்யானந்தரை எப்படியாவது மாட்டி வைக்க வேண்டும்‌ என்று தான்‌ இந்த வழக்கை கொண்டு வந்திருக்கிறார்கள்‌.

நிற்காத வழக்குகளை வருட கணக்கில்‌ இழுப்தற்க்கு ஒரு வழி உண்டு.  வேண்டாதவர்களை இப்படி தான்‌ பாடு படுத்துகிறார்கள்‌. ஒரு குற்‌றச்சாட்டை தாக்கல்‌ செய்வார்கள்‌, ஒரு வழக்கை ஆரம்பித்து வைப்பார்கள்‌, அபராதி என நிருபிக்க மாட்டார்கள்‌, அதே சமயம்‌ வழக்கை வாபஸ் வாங்க மாட்டார்கள்‌, இந்த இரண்டு கெட்டான நிலையை பல வருடம்‌ தொடர வைப்பார்கள்‌, இதெல்லாம்‌ செய்து வேண்டாதவர்களை பரிதாபமான நிலையில்‌ கொண்டு விடுவார்கள்‌.  என்‌ அபிப்பிராயம்‌ என்னவென்றால்‌ ஒரு கிரிமினல்‌ வழக்கு ஆரம்பம்‌ ஆனதும்‌ அந்த வழக்கை முடிபதற்க்காக ஒரு காலாவதி தேதியை குறித்து வைக்க வேண்டும்‌.  அந்த காலாவதி தேதி வருவதற்க்கு முன்னாடி “குற்‌றம்‌ சாட்ட பட்டவர்‌ அபராதி தான்‌” என்று நிருபிக்க முடியாவிட்டால்‌ “அவர்‌ நிரபராதி தான்‌” என்று அறிவித்து, வழக்கை காலி செய்ய வேண்டும்‌.

ஞானிகள்‌ சம்பந்தபட்ட சர்ச்சைகளில்‌ ஊடகங்கள்‌ “நாம்‌ தான்‌ பஞ்சாயத்து” என்று நினைக்கிறார்கள்‌, ஞானிகள்‌ பற்‌றி அவதூறு எழுதுகிறார்கள்‌.  ஒரு ஞானி வழக்கில்‌ தோற்‌றால்‌ கூட பெயர்‌ அவ்வளவு கெடாது.  ஒரு இந்து நன்றாக வந்தால்‌, ஒரு இந்து சிந்தனை விவாதங்களில்‌ நன்றாக பேசினால்‌, ஊடகங்கள்‌ அந்த இந்துவை எப்படியாவது கவிழ்க்க வேண்டும என்று ஒற்‌ற காலில்‌ நிற்கிறார்கள்‌.  ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வர வேண்டும்‌.  ஊடகங்கள்‌ ஒரு நபரை குற்‌றம்‌ சொல்லும்‌ செய்தியை எழுதினால்‌, அப்போதைக்கு அப்போதே ஒரு காலாவதி தேதியை குறித்து வைக்க வேண்டும்‌.  அந்த காலாவதி தேதி வருவதற்க்கு முன்னாடி அந்த குற்‌றத்திற்கு சாட்சியம்‌ கொண்டு வர வேண்டும்‌. முடியாவிட்டால்‌ ஊடகங்கள்‌ அந்த நபரை பற்‌றி நல்ல செய்திகள்‌ பக்கம்‌ பக்கமாக எழுத வேண்டும்‌. மூன்று மடங்கு அதிக பக்கங்கள்‌ எழுத வேண்டும்‌. மூன்று மடங்கு அதிக காலத்திற்க்கும்‌ நல்ல செய்திகள்‌  எழுத வேண்டும்‌.  இப்படி ஒரு நிபந்தனையை கொண்டு வராவிட்டால்‌, ஊடகங்கள்‌ பொறுப்பு இல்லாமற்‌ எதுவும்‌ எழுதுவார்கள்‌.

இந்தியாவின்‌ கலாசாரங்களையும்‌ மரபுகளையும்‌ அழிப்பதற்க்காக முயற்ச்சி செய்யும்‌ அமைப்புகளை பற்‌றி “உடையும்‌ இந்தியா” என்ற தமிழ்‌ புத்தகத்தில்‌ நான்‌ எழுதிருக்கிறேன்‌.  ஒரு நபர்‌ இந்தியாவின்‌ கலாசாரங்களையும்‌ மறபுகளையும்‌ நன்றாக காப்பாற்‌றுகிறாரென்றால்‌, அந்த நபரை எதிரி என்று முத்திரை குத்துவார்கள்‌,  அந்த நபரை கவிழ்க்க மிகுந்த தீமையுடன்‌ திட்டம்‌ போடுவார்கள்‌.  எனக்கு இதெல்லாம்‌ ஆகியிருக்கிறது, நான்‌ நேரில்‌ கண்டதை தான்‌ சொல்கிறேன்‌.  தென்‌ இந்தியாவில்‌, தமிழ்‌ நாட்டில்‌ பலர்‌ கிறிஸ்துவ மதத்திற்க்கு மாறலாம்‌ என்று யோசனை செய்தார்கள்‌,  ஆனால்‌ சுவாமி நிதியாநந்தரின்‌ சேவையை பார்த்து அவர்கள்‌ மாறவில்லை.

இந்துகள்‌ சிந்தனை குருஷேத்திரத்தில்‌ போராடும்‌ ஞானிகளுக்காக நியாயம்‌ கேட்டு வாங்குவதாக ஒரு சர்ச்சை வந்தால்‌, நான்‌ ஊடகங்களின்‌ வார்த்தையை விட ஞானிகளின்‌ வார்த்தையை பெரிதாக பார்க்கிறேன்‌.  சட்டத்தின்‌ படி, குற்‌றசாட்டை போட்டவர்கள்‌ தான்‌ சாட்சியங்களை கொண்டு வர வேண்டும்‌. அது வரை ஊரில்‌ இருக்கிறவர்கள்‌ குற்‌றம்‌ சாட்டப்பட்டவரை நிரபராதியாக பார்க்க வேண்டும்‌.  என்‌ கருத்தும்‌ இதே தான்‌.  “இவர்கள்‌ நம்பகூடியவர்கள்‌” என்ற பட்டம்‌ ஊடகங்கள்ளுக்கு எளிதில்‌ தர கூடாது. இந்துக்களிடையே சில்லரை விவாதங்கள்‌ அதிகம்‌.  நாம்‌ ஒரு ஞானியை “நமக்கு பிடித்தவர்‌, நமக்கு வேண்டியவர்‌” என்று முத்திரை குத்துகிறோம்‌, அந்த ஞானியின்‌ வழியில்‌ செல்கிறோம்‌. மற்‌ற ஞானிகளின்‌ தத்துவங்களில்‌, சடங்குகளில்‌, பழக்க வழக்கங்களில்‌ கோளாறு கண்டு பிடிக்கிறோம்‌.  இதை ஒரு சிந்தனை லீலையாக பார்க்கிறோம்‌.  ஒரு ஞானிவிற்க்கு கஷ்ட காலம்‌  வந்தால்‌, நாம்‌ அந்த ஞானிக்கு உதவி செய்யாமல்‌,  ஆளுக்கு ஒரு திக்கில்‌ பதுங்குகிறோம்‌.  இதையெல்லாம்‌ விட்டுவிட்டு, நாம்‌ எல்லாரும்‌ ஒன்றாக சேர்ந்து, இந்தியாவை உடைக்கும்‌ அணிகளை எதிர்த்து குறல்‌ கொடுக்க வேண்டும்‌.

Featured Image: Pragyata.comCategories: Tamil Articles

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: