வரலாற்றுச் சான்றுகளைக் கடந்துசெல்லும் (ஓரங்கட்டும்) தர்மம்

Tamil Posts

பெரும்பாலான கிறுஸ்தவ அப்ரஹாமிக் கருத்து வேறுபாடுகளும் போர்களும் கடவுள் என்ன சொன்னார்? எப்படிச் சொன்னார்? மேலும் அதன் உண்மையான பொருள் என்ன? என்பதிலேயே துவங்குகின்றன. அதை மேலும் உறுதிபடுத்திக் கொள்ள மதங்களின் வழிபாட்டு முறைகளும் முக்கிய நம்பிக்கைகளும் விவாதிக்கப்பட்டு எழுதப்பட்டு அந்தத் தீவிர ஆழ்ந்த நம்பிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிறுஸ்துவ மதத்தில் வரலாற்றில் ஏசுவின் பங்கு எனும் சிந்தனை அவர்களின் ஏசுவின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட நூல்களில் நன்கு விளக்கப்படுகிறது. இவ்வாறு எழுதப்பட்ட பாடல்கள் கிறுஸ்தவர்களின் அனைத்து தேவாலயங்களிலும் கிறுஸ்துவர்களால் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு அவர்களது அடிப்படை நோக்கமும் அவை யாவும் உண்மையென்ற உறுதிமொழியும் அவர்களால் ஏற்கப்படவேண்டும். இவை யாவும் உண்மைதானா என்ற சந்தேகம் எந்த கிறுஸ்துவருக்காவது ஏற்பட்டால் அவர்கள் மறக்காமல் 325ம் ஆண்டு முதன்முதலில் எழுதப்பட்ட மதக்கோட்பாடு குறித்த புத்தகத்தைப் படித்துத் தம் சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.

ரோமானியப் பேரரசின் அரசாங்க மதமாகக் கிறுஸ்தவம் ஆகிக்கொண்டிருந்த காலம் அது. இந்த நடைமுறை கத்தோலிக்கர்களிடையேயும் ஆங்கிலிக்கன்களிடையேயும் மற்றும் பெரும்பான்மையான ப்ராட்டஸடண்ட் தேவாலயங்களிலும் அனுசரிக்கப்படும் அதிகாரப்பூர்வமானக் கோட்பாடாகும்.

இந்தக் கோட்பாட்டின் உண்மையான அர்த்தம் ஏசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே மோட்சம் கிட்;டும் என்பதாகும். வரலாற்றுச் சம்பவங்களில் காணப்படும் தேவதூதர்களின் வருகையிலிருந்து நாம் இதைப்புரிந்துகொள்கிறோம்.

ஈடர்ன் தோட்டத்தில் நடந்த பாவத்தினால் மனித குலத்தின் மீது விழுந்த சபத்திலிருந்து மனிதன் விடுபட்டு மோட்சத்தைப் பெறவேண்டும் என்பது அவர்களின் எழுதப்படாத (எழுதப்பட்ட?) விதி.

கிறுஸ்துவர்களின் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு ஒரு குறிப்பிட்ட நாளில் மனித வாழ்க்கையில ஏசு நுழைந்ததை ஒரு வரலாற்று ஆவணமாகப் போற்றிப் பாதுகாத்துத் தம் அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதே. இது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம். இந்த வரலாற்றுச் சம்பவத்தை உலகம் முழுமைக்கும் பரப்பி உலக மக்கள் அனைவரும் ஏசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே அவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பதை ஒரு பொது விதி ஆக்குவதே ஆகும். இந்த வரலாற்று உண்மையை மக்கள் மறக்காமல் இருப்பதற்கு தேவாலயங்களால் நியமிக்கப்படும் மதபோதகர்கள் (சரியானவர்களோ தவறிழைக்கக்கூடியவரகளோ) இருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் கூறிக்கொள்ளும் வரலாற்றில் வெளிப்பட்ட தேவ உண்மையானது உரிமையாகக்கொண்டாடப்படுவதற்குச் சற்றும் பொருந்தாததாக இருப்பதைக் குறிப்பிடவே நான் ‘வரலாற்று-நடுநிலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

இந்த வரலாற்று நடுநிலை என்பதில் கிறுஸ்துவர்களின் நம்பிக்கைகளுக்கும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து-பௌத்த-ஜைன-சீக்கிய மதத்தவர்களுக்கும் இடையே மிக ஆழமானதொரு வேறுபாடு இருக்கிறது.

தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மதங்களைச் சேர்ந்த மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டால் அவனுடைய உடலிலும் உள்ளுணர்விலும் அதற்கான வழி தோன்றுகிறது. தர்மத்தின் மீது வரலாற்று ஆவணம் பாவம் மற்றும் கீழப்படியாமை போன்ற சுமைகள் இல்லை. நான் ‘பலதரப்பட்ட மதங்களின் உரையாடல்’ (journal of inter religious dialogue) என்ற இதழின் தலைமை ஆசிரியை திருமதி ஜோஷ்வா ஸாண்டன் என்பவரிடம் நிகழ்த்திய அற்புதமான உரையாடல்களின் தலைப்பில் இந்க ‘வரலாற்று-நடுநிலை’ என்பது முக்கியமான ஒன்றாகும்.

நமது இந்து மதத்தில் கடவுளை உணரவும் காணவும் ஒருவனுக்கு வரலாற்று உண்மைகள் பற்றிய பிரக்ஞை தேவையில்லை. மாறாக அவன் தன்னுள்ளிருக்கும் சக்தியை முறையாகத் தட்;டி எழுப்பி இறைவனை உணர முடியும். நமது பாரம்பரிய தர்ம நெறிமுறைகள் அனைத்தும் இதை உறுதிப்படுத்துகின்றன. நமது இந்து தர்மத்தையும் மதத்தையும் நம்பாதவருக்குக் கூட இது சாத்தியமே. ஆனால் கிறுஸ்துவ மதத்தின் படி ஒரு கிறுஸ்துவராலேயே ஏசுவுடன் ஒன்றிணைய முடியாது. அவர்கள் ஏசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மோட்சத்தை மட்டுமே அடையமுடியும். இக்கருத்து தேவதூதர்களின் வருகை மற்றும் வரலாற்றுச் சான்றுகளிலிருந்து நமக்குப் புரிகிறது.

இத்தகைய வரையறைக்குள் வராத வரலாற்றுச் சான்று என்பது தனி மனிதனுடைய ‘இறைவனைத் தேடும்’ உண்மையான எண்ணத்தை சந்தேகிக்கிறது மேலும் பலவீனப் படுத்துகிறது. இதனால் இவ்வுண்மை மீண்டும் சீர்செய்யப்பட முடியாமல் போகலாம். கிறுஸ்துவ மதத்தின் படி ஏசுவின் கட்;டளைகளுக்குக் கீழ்ப்படியாத வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து விலகியிருக்கும் ஒருவனுக்கு –அது கிறுஸ்துவனானாலும் – ஏசுவுடன் யாதொரு தொடர்பும் கிடையாது எனும் ஒரு அடிப்படையிலிருந்தே முரண்படும் கருத்து தோன்றுகிறது. நான் இவர்களின் இந்த ‘வரலாற்றுத் தொடர்பு’ எனும் பிடிவாதத்தைதான் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்; இந்து-பௌத்த-ஜைன-சீக்கிய மதங்களுக்கும் கிறுஸ்தவ மதத்திற்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடாகக் கருதுகிறேன். இந்து மதத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மனிதனும்; தன்னை மேம்படுத்திக்கொண்டு இறைவனோ ஒன்று கலப்பதற்கு யாதொரு வரலாற்றுத்தொடர்பும் தேவையில்லை.

இப்படி வரலாற்று உண்மைகளுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் தராமலேயே இந்து மதம் பல காலங்களாக அதன் ஆன்மீக வழி வந்த பெரியவர்களின் வழிகாட்டுதலால் மேன்மையடைந்திருக்கிறது.

நம் தியானப் பயிற்சியானது மனிதனைச் சூழ்ந்திருக்கும் அறியாமையை அகற்றி  அவனுடைய இயற்கையான ஞானத்தைத் தெளிவற்றதாக்கும் மாயத்திரையைக் களைந்து எந்த வரலாற்றுச் சான்றுகளின் தொடர்பும் இல்லாமல் மிக உன்னதமான இறையுணர்வை அவனுக்குப் புரியவைக்க உதவுகிறது.

எனவே நம் இந்து மதத்தின் அனைத்து வரலாற்றுச் சான்றுகளும் வரலாற்று நினைவுகளும் புண்ணியத்தலங்களும் பாழ்பட்டு முற்றிலும் அழிந்து போனாலும கிறுஸ்துவ மதத்தைப் போல இறைத்தூதர்களின் வருகையில்லாமலேயே நம்மால் வெறும் தியானத்தின் மூலமாகவே நம் கடவுளைப்பற்றிய உண்மையைத் திரும்பப் பெற முடியும்.

Leave a Reply