இந்துக்களின் நற்செய்தி

Tamil Posts

நமது உலகம் தற்பொழுது மாறுதல், உலகமயமாதல், உலகின் பல பகுதிகளுக்கும் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுதல், சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள், மதம் சார்ந்த முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னேற்றம் போன்றதொரு காலகட்டத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் யுகம் யுகமாக இருந்துவரும் குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வைப்பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது.

இன்றய மனப்போராட்டங்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான தீர்வுகள், வழக்கொழிந்தவையாகவும் (obsolete), போதாதவையாகவும் இருக்கின்றன. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும், மேற்கத்திய உணர்வைப் பரப்புவதற்காகவே உண்டாக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலக நிகழ்வுகளில் கொடூரமான ஆதிக்க சக்தியாகத் திகழ்கின்றன.

உலகின் இந்தத் தோற்றமானது, வரலாறுகளையும் புராணங்களையும், அறிவார்ந்த பாரம்பரியத்தையும், மத நம்பிக்கைகளையும், ஐரோப்பிய வெள்ளைகாரன்கள் மற்றும் அமெரிக்க வெள்ளைகாரன்கள் நம்பிக்கைகளுக்கேற்றவாறே, மிக ஆழ்ந்த முன்யோசனையுடனும், புத்திசாலித்தனத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகியல் சூழ்நிலையின் வசதியும் வாய்ப்பும், ஆசிய கண்டத்திற்கு அனுகூலமாகத் திரும்பியுள்ள இந்த நேரத்தில், நம் பாரத மக்கள், பல யுகங்களாகக் கடைபிடித்து வரும் மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும், மாறுபட்டும் எழும் குரல்களை பொருட்படுத்துவதற்கு ஏற்றதல்ல என்று நம்மால் உதாசினப்படுத்த முடியும். அல்லது மேற்கத்தியர்கள், உலக நன்மைக்காகத் தாங்கள் தோற்றுவித்ததாகக் கூறிக்கொள்ளும் இந்தப் புதியசிந்தனைகளும், கருத்துக்களும் நமதுகலாசாரத்தை அழிக்க கூடியவை என்றும் புரிந்துகொள்ள முடியும்.

நம் எல்லோருக்கும் நன்குதெரிந்த “நற்செய்திகள்” என்ற மிகவும் பழமையான ஒரு சொற்றொடர் உள்ளது. (இந்தச் சொற்றொடர் “காஸ்ப்பல்” [gospel] என்றவார்த்தையின் நேர் அர்த்தமாகும்) இந்தச் சொற்றொடர், நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, உண்மையென யூகிக்ப்பட்ட ஒன்றாகும். கிறிஸ்துவர்களின் “நற்செய்திகள்” என்பது மனிதகுலத்தின் ஒட்டுமொத்த பாவச் செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்காகவும், பரவப்பட்ட ஜென்மங்களைக் காக்கவும் ஏசு தன்னைசிலுவையில் அறைந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்துகொண்டார் என்று கூறப்படும் கதையை தொடர்புடையது.

இருந்தும், இந்துமதம் இதுபோன்ற பிராயச்சித்தங்கள் தேவையற்றவை எனக் கருதுகின்றது. மாறாக மனிதன் பாவியல்ல. இயல்பாகவே தெய்வீகமானவன்; மேலும் ஏசுவிடம், பொருந்தியிருந்த இறைத்தன்மை அதே அளவு நம்மிடமும் உள்ளது. இந்தத் தெய்வீகத் தன்மையை வெளிக்கொண்டுவரவும், கண்டறியவும், யாருடைய கடந்தகால உயிர்த்தியாகமும் மனிதனுக்குத் தேவையில்லை.

நமக்கு இத்தகைய ஒரு அசாரதணமான நம்பிக்கையூட்டும் நற்சிந்தனையைநான் “இந்துக்களின் நற்செய்தி” என்று குறிப்பிடுகிறேன்.

இவை போன்ற சந்தோஷமான செய்திகள் யாவும் இந்த “இந்துக்களின் நற்செய்திகள்” கட்டுரையில் கடினநேரக்(??) காட்சிகளேயாகும். இந்தக் கட்டுரை மனிதனின் சாத்தியக்கூறுகளை உயர்த்தி, மனிதன், கடவுள் மற்றும் பிரபஞ்சத்திற்கிடையேயான ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது. மேலும் இறைவனைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்வதற்கு, ஒத்தகருத்துக்களுடன் இருப்பதைவிட, மாறுபட்டு இருப்பதே சுலபமானது என்று கூறுகிறது.

உலகளாவிய எனது பார்வையைப் புரிந்துகொள்ள எனது முக்கியமான சில வாக்குறுதிகள்.

  1. கிறிஸ்துவ மற்றும் பிறமதங்களில் காணப்படுவதுபோல், இறைவனைப் புரிந்துகொள்வதையும், இறைவனை அடைவதையும் மதத்தலைவர்களால் கட்டுபடுத்தமுடியாது. மாறாகயோகாசனம் போன்ற சீரிய ஆன்மீகப் பயிற்சிகள் மூலம், வரலாறு, மதம், இனம் சார்ந்த அடையாளங்களிலிருந்து விடுபட்டு, இறைவனின் திருவடி நிலையை நாம் அடைய முடியும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் மனிதனுடைய இயற்கையான தெய்வீகத்தன்மை, சில மத அமைப்புகளால் நியமிக்கப்படடிருக்கம் இறைத்தூதர்களை நம்பி இல்லை.
  2. தர்மம் சார்ந்த நமது பாரம்பரியத்தில் இதற்கு முன்பும் இப்பொழுதும் தர்மத்திற்கும் இயற்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை.
  3. மேற்கத்திய புராணக் கதைகளில் காணப்படுவது போன்ற எவ்விதமான குழப்பங்களுக்கும், அவை பற்றிய அச்சங்களுக்கும் அவசியமில்லை. மாறாக இந்த மண்ணில் காணப்படும் இயற்கையான, சாதாரணமான, உண்மையான விஷயங்களே குழப்பங்களென்று நம்மால் கருதப்படுகின்றன.

இவையாவும், மனிதன் தன்னை மேதாவியாகக் கருதிக்கொண்டு, இயற்கையின் சிக்கலான தன்மைகளைத் தன் அறிவுக்குட்பட்ட அளவில் தவறாக புரிந்து கொள்வதே. இயற்கையிடம் மரியாதையுடன் இருந்தால் மட்டுமே, சொர்கத்திற்கிணையான மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமாகும்.

முன்னேற்றம், மேம்பாடு என்ற பெயரில் இயற்கையை அழிக்க வேண்டியதில்லை. உண்மையில் நம்மையும், நம் உலகத்தையும் என்றென்றும் உயிருடனும், நிலையாகவும் வைத்திருக்கும், உலகமெங்கும் சூழ்ந்திருக்கும், தெய்வீக அதிர்வலைகளை பாழாக்காமல் இருந்தாலே, நமது முன்னேற்றமும், மேம்பாடும் இன்னும் விரைவாக ஏற்படும்.

இயற்கையாகவே நம்மிடம் இருக்கும் சாத்தியப்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள ஒருங்கிணைந்த அல்லது உலகார்ந்த ஒரு மதத்தலைவர் தேவையில்லை. மாறாக, நமக்கும் நம் முன்னோர்களுக்கும் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டே, நம்மிடம் இருப்பனவற்றை நாம் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மற்ற மதத்தினரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்பதே நமது ஹிந்து மதத்தின் சீரிய கொள்கையாகும். பிற மதத்தினரிடம் அரசியல் காரணங்களுக்காக வளைந்து கொடுப்பதோ, அல்லது வேண்டா வெறுப்பாகத் துவேஷத்துடன் நம் மீது திணிக்கப்படும் மதக்கருத்துக்களை ஏற்றுக்கொள்வதோ இல்லை.

இது வெறும் பிற மதத்தவரை சகித்துக் கொள்ளுதல் என்பதையும் தாண்டிய ஒரு உயர்ந்த பண்பாகும்.

பிற மதத்தைச் சார்ந்தவர்களை, நமது ‘இனப் பெரும்பான்மை’ எனும் பிரத்தியேக உரிமை மூலம் மதமாற்றம் செய்வதாக எங்களுக்கு எதிராகப் புனையப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்.

1 thought on “இந்துக்களின் நற்செய்தி

Leave a Reply