சகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்

Tamil Posts

மதநல்லிணக்கம் சார்ந்த விவாதங்களில் பிற மதங்களைச் சார்ந்தவர்களின் நம்பிக்கைகளைச் சகித்துக்கொள்ளுதல்எனும் சொற்றொடரை ஆதரிப்பது நாகரிககெனக் கருதப்படுகிறது. ஆமால் நாம் அதனைப் பிற மதத்தவர்களின் மனதைப் புண்படுத்தும் வார்த்தையாகவே கருதுகிறோம். கணவனோ மனைவியோ கூட ஒருவர் மற்றவரால் சகித்துக்கொள்ளப்படுகிறார்கள் என்ற வார்த்தையை ஏற்கமாட்டார்கள். சுயமரியாதையுள்ள எந்த ஊழியரும் தன் சக ஊழியர் தன்னைச் சகித்துக்கொள்கிறார் என்பதை ஏற்கமாட்டார். நம்மைவிட நாம் யாரைத் தாழ்ந்தவராகக் கருதுகிறோமோ அவரைத்தான் நாம் சகித்துக்கொள்வதாகக் கூறிக்கொள்கிறோம்.

கிறுஸ்தவ மதபோதகர்கள் கிறுஸ்துவுக்கு எதிரானவர்களையும் விக்ரக வழிபாட்டில் ஈடுபடுவவர்களையும் நாஸ்திகர்களையும் தாங்கள் சகித்துக்கொள்வதாகக் கூறிவருகிறார்கள். இந்த சகித்துக்கொள்ளுதல்என்ற வார்த்தைக்குப் பதிலாகப்  பரஸ்பர மரியாதைஎன்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு நம்மைப் பொறுத்த வரையில் இது மிகச் சரியான தருணம்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கிறுஸ்தவர்களின் சர்வாதிகார ஆளுமைக்கு எதிராகப் போர்புரிந்த பொய்யான மதத்தினரென்று கிறுஸ்துவர்களால் துன்புறுத்தப்பட்ட பிறமதத்தினருடன் கலந்திருப்பதே சகிப்புத்தன்மை என்று சொல்லப்பட்டுவந்தது.

சகிப்புத்தன்மை என்ற வார்த்தையே விரோதிகள் தங்கள் கூட்டத்தினரிடையே தோன்றும் எதிர்ப்பை எந்த பரஸ்பர மரியாதையும் இல்லாமல் கட்டுப்படுத்துவதற்குச் சொல்லிக்கொண்ட ஒரு தற்தாலிக அரசியல் சமாளிப்புஆகும். அதனால்தான் அந்த சகிப்புத்தன்மைசிதைந்தது.

            ‘சகிப்புத்தன்மைக்கு எதிரான என்னுடைய பிரச்சாரம் 1990ம் வருடத்தின் பிற்பகுதியில் துவங்கியது. நான் க்ளார்மோண்ட்பல்கலைக்கழகத்தில் ஒரு பெரிய மதநல்லிணக்கத் துவக்க முயற்சிஎன்ற பேச அழைக்கப்பட்டிருந்தேன்;. முக்கிய பெரும் மதங்களின்பால் நம்பிக்கைக் கொண்ட தலைவர்கள் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றுவதற்காக அழைக்கப்பட்டுக் குழுமியிருந்தனர். நான் அங்கு பேசுகையில் மதசகிப்புத்தன்மைஎன்ற வார்த்தைக்குப் பதிலாகப் பரஸ்பர மரியாதைஎன்ற வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும் என்று வாதிட்டேன்.

            மறுநாள் க்ளார்மோண்ட்பல்கலைக்கழகத்தின் னதத்துறையின் தலைவரும் அதன் அமைப்பாளருமான பேராசிரியர் ஜோ டார்ஜஸென்எனும் பெண்மணி என்னிடம் நான் எந்த அமைப்பில் பரஸ்பரமரியாதைஎன்ற வார்த்தையைத் தீர்மானத்தில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியதன் மூலம் மாபெரும் கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டதாகக் கூறினார். அங்கு வந்திருந்த ஒருவரும் பரஸ்பர மரியாதைஎன்ற வார்த்தையை ஏற்காவிட்டாலும் தான் அதை ஏற்பதாக் கூறினார். மொத்தத்தில் நான் அதன் ஆணிவேரையே அசைத்துவிட்டேன்;. பிறகு நான் எனது அடுத்துவந்த அனைத்துப் பிரசங்கங்களிலும் சகித்துக்கொள்ளுதல்என்ற வார்த்தைக்குப் பதிலாகப் பரஸ்பர மரியாதை எனும் வார்த்தையைப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். அந்தப் பிபிரசங்கக் கூட்டங்களில் தர்மத்தை அடிப்படையாகக்கொண்ட இந்து பௌத்த ஜைன சீக்கிய மதத்தலைவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அப்ரஹாமிக் மதத்தினரிடையே இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்வதில் கணிசமான எதிர்ப்பு இருந்தது.

            அதன் பிறகு வெகு விரைவில் கி.பி.2000 ல் நடந்த ஐக்கிய நாடுகளின் மதங்களுக்கிடையேயான உச்சி மாநாட்டில் இந்துமதத் தலைவர்களின் பரதிநிதிகளின் குழு ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் பங்கேற்றது. அதில் ஸ்ரீஸ்வாமிஜீ அந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வமானத் திருத்தியமைக்கப்பட்ட உரையில் மதசதிப்புத்தன்மைஎன்ற வார்த்தைக்குப் பதிலாகப் பரஸ்பர மரியாதைஎனும் வார்த்தை இடம்பெற வலியுறுத்தினார். இதைப் பின்னாளில் பெனடிக்ட் கிறுஸ்துவாலயத்தின்போப் ஆக நியமிக்கப்பட்ட  திரு.ராட்ஸிங்கர் கடுமையாக எதிர்த்தார். அவருடைய எண்ணம் கிறுஸ்தவர்களை எதிர்ப்பவர்களை மதிக்கவேண்டுமென்றால் பின் அவர்களைக் கிறுஸ்துவர்களாக மாற்றுவதில் யாதொரு நன்மையும் இல்லை என்பதாகும்.

            இந்த வாதம் சிக்கலான கட்டத்தை அடைந்து மிக மோசமானதொரு சொற்போர் வெடித்தது. மதநல்லிணக்க மாநாடுகளில் கிறுஸ்துவர்;களும் கிறுஸ்துவரல்லாதவர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்கிற நிலையை; வலியுறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதென்று இந்துமதப் பெரியவர்கள் கருதினர். அந்தத் தீர்மானம் நிறைவேற இருந்தக் கடைசி நேரத்தில் வாடிகன்கண்களை இறுக்க மூடிக்கொண்டு மௌனம் சாதித்தது. ஒரு மாதம் கழித்து வாடிகன் கிறுஸ்துவாலயம் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டது. அதில் கிறுஸ்துவ மதத்தைச் சாராதவர்கள் தங்கள் மதக்கடவுள்களின் அருளைப் பெற்றிருந்தாலும் ஏசுவின் பரிபூரண அருளைப் பெறாத வரையில் அவர்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்களே என்றிருந்தது. பல கிறுஸ்துவ மிதவாதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும்  இக்கருத்தே வாடிகன் தேவாலயத்தின் அதிகாரப்பூர்வமான கருத்தாக நீடிக்கிறது.

            ‘பரஸ்பர மரியாதை என்கிற எனது சோதனை முயற்சி மிதவாத இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. வானொலியில் செப்டம்பர் 11 2011ல் நடந்த எனது நேர்காணலில் தன்னை ஒரு உள்ளூர் பாக்கிஸ்தான் மதத்தலைவி என அறிமுகம் செய்துகொண்டு என்னை பரஸ்பர மரியாதைஎன்ற வார்த்தைக்காகப் பாராட்டி மேலும் தான் இந்தக் கருத்தை முழுமையாக ஏற்பதாகக் கூறினார்.

நான் அவருடைய நன்மைக்காக நாங்கள் இந்துமதத்தில் குறிப்பாக விக்ரக ஆராதனையில் பெண்களைத் தெய்வமாக மதிப்பதாகவும் எங்களுக்கு மறுஅவதாரத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்தேன்.

அந்தப் பாக்கிஸ்தானியப் பெண்மணி தான் இவையெல்லாவற்றையும் மதிப்பதாகக் கூறினாள். நான் அப்பெண்ணிடம் பரஸ்பரமரியாதை என்பது நான் என்னுடைய மதநம்;பிக்கைகளுக்காக மதிக்கப்படுவதும் அதே நேரத்தில் பிற மதத்தினர் என்னுடைய மதநம்பிக்கைகளை ஏற்கவோ பின்பற்றவேண்டிய அவசியமோ இல்லை என்று விளக்கினேன். பரஸ்பர மதித்தல்எனும் எனது கருத்தை மேம்போக்காக அல்லாமல் நன்கு புரிந்துகொண்டு அந்தப் பெண்மணி சம்மதித்தாரா என்று மீண்டும் கேட்டேன். அந்தப்பெண் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

            2007ம் ஆண்டு நான் டெல்லியில் ஒரு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டேன். எமராய் பல்கலைக்கழகத்திலிருந்து மதங்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் விதமாகப் புதிதாகத் துவங்கப்பட்ட ஒரு குழு வந்திருந்தது. எமராய் பல்கலைக்கழகத்தின் தலைவரும் லூதரென் அமைச்சருமான ஒரு பெண்மணி வந்திருந்தார். நான் அப்பெண்மணியிடம் லூதரென் திருச்சபையின் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு அனைத்து மதங்களுக்கிடையேயும் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் பணி உங்களுக்கு தொடர்ச்சியானதாகவும் இணக்கமானதாகவும் இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அப்பெண்மணி ஆம்என்றார். உடனே நான் அவரிடம் உங்கள் லூதரென் தேவாலயத்தின் கொள்கை பிறமதங்களைச் சகித்துக்கொள்வதா அல்லது பிறமதத்தவரின் வழிமுறைகளும் நோக்கங்களும் கடவுளைச்சென்றடைவதற்கான பாதைதான் என்று புரிந்துகொண்டு அவர்களையும் பரஸ்பரம் மதி;ப்பதா என்று கேட்டேன். அதற்கு அவர் இது ஒரு நல்ல கேள்வி என்றும் தானும் அதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினாரே தவிர அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

            எந்த ஒரு மதத்தலைவருக்கும் தன் மத நம்பிக்கைகளைத் தம் மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கள்ளங்கபடமற்ற வேறு மதத்தைச் சார்ந்தவர்களிடையே திணிப்பது மிகவும் கபடத்தனமான ஒன்றாகும்.

            அனைத்து மதத்தினருக்கும் ஏசுவின் பேரருளால்; மட்டுமே மோட்சம் கிடைக்கும் என்று பிடிவாதமாக வலியுறுத்தும் ஒரு கிறுஸ்துவ தேவாலயத் தலைவரிடம் அவர் அனைத்து மதங்களும் பரஸ்பரமதித்தல்எனும் கோட்பாடுடன் பழகவேண்டும் என்ற கருத்தைப் போதிப்பார் என்று எப்படி நம்புவது? நான் எனது சந்தேகம் தீராததால் தொடர்ந்து அவரிடம் நீங்கள் இந்துக்களின் விக்ரக ஆராதனைகளையும் கடவுள் நம்பிக்கைளையும் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? உங்களுக்கு உங்கள் மதத்தலைவரிடமிருந்து அதிகாப்பூர்வமான தலையீடுகள் ஏதும் இல்லையா? நீங்கள் இந்து மதத்தின் ஸ்ரீராமன் ஸ்ரீகிருஷ்ணன் போன்ற கடவுள்களை எவ்வாறு பார்க்கிறீக்கள்? அவர்கள் இறைவனின் அவதாரங்களா அல்லது பொய்யா?

உங்கள் தேவாலயத்தின் கருத்துக்களான அனைத்துக் கடவுள்களும் ஆண் தெய்வங்களே பெண் தெய்வங்கள் கிடையாது என்பதை இந்து மதத்தின் பெண் கடவுள்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் என்னவிதமான முடிவுக்கு வருகிறீர்கள்என்று கேள்விக்கணைகளை வீசினேன். பாவம் அந்த மதத்தலைவர் காது கேளாததுபோல் என் நியாயமான சந்தேகங்கள் அனைத்தையும் ஓதுக்கித் தள்ளினார்.

            கிறுஸ்தவர்களின் ஒரு பகுதியினர் மட்டுமே எனது பரஸ்பர மதித்தல்என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்கள். பிரின்ஸ்டனிலிருந்து வெளிவரும் பல மத நம்பிக்கைகளையும் ஏற்கும் பத்திரிகையான ஸேக்ரட் ஜார்ணி யின் ஆசிரியை திருமதி ஜேனட் ஹேக் உடன் நான் 2008ல் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டேன். அவரிடம் எனது வழக்கமான எனக்கு மிகவும் பிடித்தமான கேள்வியான ஒன்றுக்கு மேற்பட்ட மதத்தினரிடையே பழகும்போது உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் நான் மிக எதிர்ப்பார்த்த பதிலான நாங்கள் பிற மதத்தினரை சகித்துக்கொள்கிறோம்; என்று கூறினார். அவருடைய இந்தப் பதில்; நாம் நமது இந்து மதத்தில் எப்படி ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அவரது நம்பிககைக்குரிய கடவுளை வழிபட அனுமதிக்கிறோம் என்றும் பிறருடைய பிரார்த்தனை மற்றும் மத வழிபாட்டுச் சடங்குகளை அனுமதிக்கிறோம் என்றும்என்னைச் சொல்லத் தூண்டியது. அந்தப் பத்திரிகை ஆசிரியை என்னுடைய இந்தப் பதிலை மறுக்கவோ அல்லது என்னுடைய இந்தக் கருத்திலிருந்து நழுவவோ செய்யாமல் தனது பத்திரிகையின் அடுத்த இதழில் எனது பரஸ்பர மதித்தல்பற்றி ஆராய்ந்து எழுதினார்.

            எங்களுக்கிடையே பலமதங்களுக்கிடையேயான நம்பிக்கைகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலின்பொழுது திரு.ராஜீவ் மல்ஹோத்ரா பரஸ்பர மரியாதைஎனும் வார்த்தைக்குப் பதிலாக சகித்துக்கொள்ளுதல் எனும் வார்த்தையைப் பயன்படுத்த மறுப்பதின் மூலம் நாம் இவ்வுலகில் அமைதியையும் புரிந்துகொள்ளுதலையும் ஏற்படுத்த நாம் செய்யும் முயற்சிகளில் பின்தங்குகிறோம் என்று குறிப்பிட்டார். அவருடைய இந்தக் கருத்து என்னை பரஸ்பர மரியாதை‘  ‘சகித்துக்கொள்ளுதல்போன்ற வார்த்தைகளுக்கிடையேயான வேறுபாடு குறித்து  மிக ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. அவர் என்னிடம் லத்தினின் தோற்றத்தின் படி சகித்துக்;கொள்ளுதல் எனும் வார்த்தைக்குப் பரஸ்பரம் அனுசரித்துச் செல்லுதல் எனும் பொருளில்லை என விவரித்தார். அவ்வார்த்தை சம்பந்தப்பட்ட இரு மதத்தினரிடையே சமமான அதிகாரம் இல்லாததையும் ஒரு மதத்தவர் விட்டுக்கொடுக்கும் நிலையிலும் அனுமதி வழங்கும் இடத்திலும் அடுத்தவர் அதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருப்பதை மறைமுகமாக உணர்த்துகிறது என்று குறிப்பிட்டார். ஆனால் லத்தின் மொழியில் ம்யூச்வல் ரெஸ்பெக்ட்எனும்; வார்த்தைக்கு நாம் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்றிருந்தது. இந்த அர்த்தம் ஹேக்கின் விளக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

Leave a Reply