அனைத்து மதங்களிடையேயும் ஒன்று போலக் காணப்படும் விஷயத்தைத் தேடும் இந்த நாகரிக உலகில் கிறுஸ்தவ மதத்தின் பரிசுத்த ஆவியும் இந்து மதத்தின் குண்டலினி எனும் பிரபஞ்சத்தின் தெய்வீக சக்தியும் சமம் என்று கிறுஸ்தவ மதத்தினரால் அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு அம்ஸங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முற்றிலும் மாறுபட்ட பிரபஞ்ச தத்துவங்களாகும்.
ஆதிகால வேத ஸாஸ்திரங்கள் சர்வ வல்லமையும் படைக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தெய்வீக சக்தி இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது என்று விவரிக்கிறது. இந்த சக்தி என்பது இந்தப் பிரபஞ்சத்திற்கேற்றவாறு கடவுளைப் பற்றியும் அதன் வழிபாட்டு முறை பற்றியும் தொடர்ச்சியாக முறைபடுத்தப்படும் ஒரு தெய்வீக அம்ஸமாகும். இந்த சக்தியானவள் நாம் வசிக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கத்திலிருந்தே எங்கும் நிறைந்திருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடித்தளம் போன்றவள்.
மேலும் அவளே இவ்வுலகில் மாறுபட்டுள்ள அனைத்திற்கும் உணர்வாகவும் சக்தியாகவும் அனைத்தையும் ஒருங்கிணைப்பவளாகவும் இருக்கிறாள்.
ஆனால் கிறுஸ்தவ மதத்திலோ மனிதனுக்குள் இயல்பாகவே ஒரு புனிதமான ஆற்றல் இருந்தாலும் அந்த ஆற்றலானது எங்கோ பரமண்டலத்திலிருந்து மனிதனை நோக்கி இறங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் தங்களுடைய இந்தப் பரிசுத்த ஆவி சமாச்சாரத்தை இயற்கையாகவே மனித ஆன்மாவில் பொதிந்திருக்கும் இப்பிரபஞ்ச சக்தியின் சாரமாகப் பார்ப்பதில்லை.
கிறுஸ்தவ மதம் கடவுளையும் இவ்வுலகில் உயிரினங்கள் படைக்கப்படுவதையும் இரு வேறு அம்ஸங்களாகப் பார்க்கிறது. எனவே அவர்களுக்கு உலகுக்கு இதை நிரூபிக்க தேவதூதர்கள் வரலாற்றுச் சான்றுகள் மதகுருமார்கள் மற்றும் அதற்கான ஒரு இயக்கம் அவசியமாகிறது. ஆனால் நம் இந்துமதத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியை உணர இதுபோன்ற செயற்கையான நிரூபணங்கள் தேவைப்படுவதில்லை. மாறாக யோகாசனம் போன்ற சில எளிய பயிற்சிகளின் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை நம்மில் நாம் உணரமுடியும். இந்துக்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிரபஞ்ச சக்தியானவளை சகல ஆற்றல்களையும் இயற்கையாகவே தன்னுள் கொண்டுள்ள பெண் கடவுளாகக் கருதுகின்றனர்.
இந்தப் பிரபஞ்ச சக்தியானது ஒரு தொடர்ச்சியான மின் அலைகளைப் போல எப்பொழுதும் நமது உடலின் தண்டுவடத்தின் கீழே குண்டலினிகள் அதாவது ஏழு சக்கரங்கள் என்று சொல்லப்படும் சூட்சம புள்ளிகளால் நம்மால் உணரப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. இந்தக் குண்டலினி என்று சொல்லப்படும்.
கண்களுக்குப் புலப்படாத இந்தப் பிரபஞ்ச சக்தியானது நம் ஒவ்வொருவரின் முதுகுத்தண்டிலும் அமைதியாகச் செயலற்றுக் கிடக்கிறது. எண்ணற்ற ஆன்மீக உத்திகளின் மூலம் இந்தக் குண்டலினிகளை எழுப்பி அவற்றை நம் தண்டுவடத்தில் இருக்கும்; ஏழு சக்கரங்கள் மூலம் கீழிருந்து மேல் முகமாக நகர்த்தி ஒருவரை இந்த எல்லையற்ற பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் உன்னத நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும்.
ஆனால் மனிதனின் உடல் கிறுஸ்துவ மதத்தில் முற்றிலும் இதற்கு மாறாகப் புரியவைக்கப்படுகிறது. ஓரு பக்கம் கடவுளின் பெயரால் மனிதன் படைக்கப்படுகிறான் என்று கூறிக்கொண்டே மற்றொரு பக்கம் இந்த உடல் ஆதாம் ஏவாள் புரிந்த பாவத்தின் பரிமாற்றம் என்று கூறி மனிதனின் உன்னதமான உடலை சாத்தான்களுக்குக் காணிக்கையாக்குகிறது.
இந்து மதத்தில் ஒரு உன்னதமான குருவானவர் தம் சீடனின் ஆன்மீக சக்தியைக் அவனுடைய குண்டலிகளிலிருந்து வெளிப்படுத்தி அந்த அனுபவத்தை அவனது அன்றாட சராசரி வாழ்வில் ஒன்றிணைத்து உணரச் செய்கிறார். இந்து மதம் இதை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவத்தை தேவதுதன் வருகையைக்கொண்டு போதிப்பதில்லை. இந்தப் பிரபஞ்ச சக்தியானது மதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தப் பிரபஞ்ச சக்தியானது சில நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மதங்களைக் கடந்து கிறுஸ்துவர்களிடையேயும் வெளிப்படுகிறது. ஆனால் கிறுஸ்துவ தேவாலயங்களும் இயக்கங்களும் இந்த இயல்பாக வெளிப்படும் ஆற்றலுக்கு ஆவி சாத்தான் என்று பெயரிட்டு ஏற்க மறுக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று எந்த கிறுஸ்துவருக்கு இது நிகழ்கிறதோ அவரை உண்மையான கிறுஸ்துவரே இல்லை என்றும் அவரைக் கிறுக்கன் என்றும் சந்தேகிக்கிறது.
நம் இந்து மதத்தில் இதுபோன்ற தீயசக்தி ஆவி சாத்தான் போன்றவை கிடையாது. மாறாக இந்த சக்தியானவள் பிரபஞ்சத்தின் திசைகள் அவற்றின் எல்லைகள் போன்ற அனைத்தையும் தன்னுள் அடக்கி இருள்-வெளிச்சம்-இதமான-கட்டுப்படுத்த இயலாத- என எதிரெதிர் துருவங்களையும் மனிதனின் இறையுணர்வில் ஒன்றிணைக்கிறாள். நமது இந்து மதமானது உக்கிரமமான காளியையும் அன்பான அன்னை பார்வதியையும் சமமாகப் பாவித்து அன்புடன் தழுவிக்கொள்கிறது. ஆனால் கிறுஸ்துவ மதமோ பரிசுத்தஆவி, சாத்தானின் ஆவி என்கிற இரட்டைத்தன்மையின் காரணமாக அன்னை சக்தியின ஒரு இயற்கை வெளிப்பாடான உக்கிரமான காளியைக் கண்டு அதிர்ச்சியடைகிறது. சாத்தன் என்று எண்ணி பைபிளைக் கையில் வைத்துக்கொண்டு இயேசுவைத் துணைக்கழைத்து உண்மையான கடவுளை விரட்ட முயற்சிக்கிறது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் வாக்கு இவர்களுக்கு மிகவும் பொருத்தம்;
இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவதில் ஏற்படும் எதிர்விளைவுகளுக்கும் தனி மனிதனே காரணமே தவிர பேய்;; பிசாசு என்று ஏதுமில்லை. மின்சாரத்தை இதற்கொரு சிறந்த ஒப்பீடாகக் கொள்ளலாம். அனைத்து மின் சாதனங்களும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப செயல்படுகின்றன. உதாரணமாக மின்சாரம் ரேடியோவைப் பாடவைக்கிறது மின்விசிறியைச் சுற்றவைக்கிறது அடுப்பில் உணவைச் சமைக்கிறது. அதை ஒழுங்காகக் கையாளாவிட்டால் நமக்கு விபத்தை ஏற்படுத்துகிறது. இதில் தெய்வீக மின்சாரம் என்றோ சாத்தானின் மின்சாரம் என்றோ எதுவும் கிடையாது. தவறு இதைப் பயன்படுத்தும் மனிதனிடம்தான்;. நமது யோகிகளும் விஞ்ஞானிகள் அச்சமில்லாமல் மின்சாரத்தைக் கையாள்வதைப்போல நமது தண்டுவடத்தில் அமைதியாகக் கிடக்கும் குண்டலினி எனும் பிரபஞ்ச சக்தியை வெளிக்கொண்டு வருகிறார்கள்.
சக்தி எனும் பெண் தேவதை ஆயிரமாயிரம் வடிவங்களில் இப்பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிறாள். ஆனால் கிறுஸ்துவர்களின் நன்கு அறிமுகமான பெண்மணி மேரியை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியுடன் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் கிறுஸ்துவர்களின் பரிசுத்த ஆவியானது கன்னி மேரியின் கருப்பையில் மர்மமான முறையில் அவதரிக்கச்செய்தது. ஆனால் இத்தகைய ஒரு புதிரான அனுபவமானது கிறுஸ்துவத்தில் மற்ற பெண்களுக்குச் சாத்தியமில்லை. ஆனால் நாம் இந்துக்கள் அனைவரும் பேதமின்றி இந்தப் பிரபஞ்ச சக்தியை எளிய ஆன்மீகப் பயிற்சியின் மூலம் நமது மூலாதார சக்கர-த்தில் உறைந்திருக்கும் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பி உணரமுடியும்.
மற்ற மதத்தின் பல நிபுணர்கள் இந்து மதத்தின் குண்டலினி சக்தியைத் தூண்டிஎழுப்புதலையும் பெந்தகொஸ்தேவினரின் ஆவிஎழுப்புதல் கூட்டங்களையும் ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்களே ராஜதுரோகக் குற்றச்சாட்டுக்குப் பயந்து இந்த ஆவிஎழுப்புதல் கூட்டங்களை ஆதாம்-ஏவாள் மூலம் தங்களுக்கு உண்டான பெரிய சாபத்திலிருந்து விடுபட்டு மோட்சத்திற்குச் செல்லும் வழி என்று கூறிக்கொள்கிறார்கள்.
நமது குண்டலினி எனும் யோகசக்தியானது அந்த நிபுணர்கள் கூறும் ஆவி உலகத்திலிருந்து மனிதனோடு தொடர்புகொண்டு செயல்புரியும் ஆவியில்லை. மாறாக மனிதனின் உடலிலிருந்து யோகசக்தியின் மூலம் வெளிப்படும் ஒவ்வொரு மனிதனும் உணரக்கூடிய தெய்வீக சக்தியாகும். கிறுஸ்தவர்கள் அவர்களுடைய முயற்சியில்லாமலேயே அவர்களிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படும் இப்பிரபஞ்ச சக்தியை ஆவி சாத்தான் என்று கூறிக்கொண்டு தங்களுடைய அறியாமையை போக்கிக்கொள்ளாமல் இந்துக்களின் யோகிகளையும் ஆன்மீக குருக்களையும் சந்தேகிக்கிறார்கள். இந்துக்களின் நமது இந்தக் குண்டலினி சக்தியைப் புரிந்துகொண்ட சில மேற்கத்தியர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முறையான யோகாசனப் பயிற்சி இல்லாமல் சில இடங்களில் முயற்சிக்கிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது பாராட்டத்தக்கதென்றாலும் எல்லையற்ற இப்பிரபஞ்சத்தின் அன்னையான சக்தியைக் கூறுபோட்டுப் பிரித்துத் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் சக்தி எனும் அன்னை தேவதையை நமது விருப்பப்படி கட்டளையிட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் செல்லப்பிராணிகளைப்போல நமக்கு அடங்கியிருக்கப் பழக்க முடியாது.
இந்தக் குண்டலினி தத்துவத்தை ஏற்றுக்கொண்டால் காலங்காலமாக சர்சுகளில் ஏசுவைப் பற்றிப்போதிக்கப்பட்டுவரும் அனைத்தும் பொய்யாகிவிடுமோ என்றும் சர்ச்சுகளின் விசாரணைக்கு ஆளாக வேண்டுமோ என்றும் பயந்து கிறுஸ்தவர்கள் நமது இந்து மதத்தின் அற்புதமான அம்சங்களை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் சர்ச்சுகளையும் பிஷப்புகளையும் சார்ந்திராமல் இந்தப் பிரபஞ்ச சக்தியைக் கிறுஸ்தவர்களும் தங்களால் உணரமுடியும் என்று நம்பத்துவங்கினால் கிறுஸ்தவ மதத்தை மீண்டும் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியிருக்குமோ என்று கவலைப்படுகிறார்கள். அவ்வாறு செய்வது கிறுஸ்துவரல்லாதவர்களின் நினைவில் இன்றும் நிலைத்திருக்கும் ஒன்றுக்குமேற்பட்ட கடவுள்களைப்பற்றிய சந்தேகத்தைத் தூண்டிவிட்டுக் கிறுஸ்தவர்களிடையே மீண்டும் குழப்பம் உண்டாகுமோ என்றஞ்சுகிறார்கள்.