ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்

பேச்சுகள் Tamil Posts

மிக முக்கியமான வலிமையான நாடுகள் சுதந்திரம் அடைந்தது அவர்களது ராணுவத்தின் நடவடிக்கைகள் மூலமே. அவர்கள், காலனி ஆதிக்கவாதிகள் சுதந்திரம் கொடுப்பதற்காக காத்திருக்கவில்லை. அவர்கள் சுதந்திரத்தை ஆதிக்கவாதிகளிடம் பிடுங்கிக்கொண்டு பின் அதனை அறிவித்தனர். அமெரிக்காவின் ஐக்கிய மாகாணங்களில், உதாரணமாக, அவர்கள் சுதந்திரத்தை அறிவித்த நாளையே சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். பிரிட்டிஷ் திரும்பி செல்ல முடிவு செய்தபோது அல்ல. அவர்கள் அப்பொழுது தாங்கள் சுதந்திர மனிதர்கள் என்று அறிவித்தனர். அவ்வாறு அறிவித்தது அவர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு இடையே பெரிய போரை துவங்கியது. பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்ற காலம் தேவைப்பட்டது. அவ்வாறு இந்திய சுதந்திரத்தின் அறிவிப்பு அக்டோபர் 21, 1943 அன்று என்று கருதப்பட வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு அவர்களது கட்டுப்பாட்டை சரணடைந்துவிட்டு செல்ல சில வருடங்கள் ஆனது. பலவீனமான மக்களே சுதந்திரத்தை ஒடுக்கியவர்கள் வழங்கியபோது கொண்டாடுவர். வலிமையான மக்கள் சுதந்திரத்தை தாங்கள் தங்களை சுதந்திரமான மனிதர்களாக அறிவித்தபோது கொண்டாடுவர். அதனால், சுதந்திரத்தை ஆகஸ்ட் 15இல் இருந்து அக்டோபர் 21க்கு மாற்றுவது என்பது மனநிலை மாற்றமே. இது நமது அடையாளத்தின் மாற்றம்.

நாம் பிரிட்டிஷ் நமக்கு சுதந்திரம் அளித்தனர், அவர்கள் நமது நாட்டை உருவாக்கினர் என்று தவறாக நம்பிக் கொண்டிருந்தோம். நிறைய வரலாற்றாசிரியர்களும் வரலாற்று புத்தகங்களும் பிரிட்டிஷ் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றும், நாம் மரியாதை செலுத்தும், சந்தோஷப்படும், கொண்டாடும் அனைத்துமே பிரிட்டிஷ்காரர்களால்தான் என்ற தவறான எண்ணத்தை பரப்புகின்றனர். இது மாற வேண்டும். நேதாஜி அவர்களின் முயற்சியால்தான் சுதந்திரம் கிடைத்தது என்றும்,  அவரது இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிஷ்காரர்களை தோற்கடித்துக் கொண்டிருந்தது என்ற வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பும், பிரிட்டிஷ் காப்பகங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

பிரிட்டிஷ்காரர்கள் இரண்டாம் உலகப்போரில் இருந்து திரும்பி வந்த இந்திய இராணுவத்தின் எழுச்சியை எண்ணி அஞ்சினர். இந்திய இராணுவத்தினர் கடுமையான, போரில் கடுமையாக்கப்பட்ட ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தனர். அவர்களை நேதாஜி அணிதிரட்டினார். நேதாஜியின் இந்த வெற்றியை கண்டு, பிரிட்டிஷ்காரர்கள் விரைவில் வெளியேற முடிவு செய்தனர் என்பது அவர்களது காப்பகங்கள் மூலம் தெரிகிறது. இதனை அவர்களது மரியாதை பாதிக்காத வகையில் செய்தனர். இந்தியாவிற்கு யாரால் எவ்வாறு சுதந்திரம் கிடைத்தது என்ற இந்த மாறுபட்ட வரலாறு ஜெனரல் பக்ஷி இன் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் அவரது புத்தகத்தை படிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நாம் நமது வரலாற்றை இந்த திசையில் மாற்ற முயற்சி  எடுத்துள்ளோம். சுதந்திரத்தின் வரலாற்றை மட்டும் அல்ல, இந்திய தேசிய ராணுவம் மற்றும் நேதாஜியின் வரலாற்றை யார் எதற்காக மறைத்தனர் என்று அறிந்து அவை மாற்றப்பட வேண்டும். நேதாஜி கொல்லப்பட்டதற்கு சாத்தியமாக ரஷ்யர்கள் பங்கு என்ன? நேரு பழிவாங்குவதற்காக சோவியத் இடம் சேர்ந்து கொண்டாரா? வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை வெளிக்கொண்டுவர வேண்டும். நான் இந்த திட்ட வேலையை துவங்க எதிர்பார்த்து உள்ளேன். ஜெய்ஹிந்த்!

ஆசிரியர்: ராஜிவ் மல்ஹோத்ரா
(Author: Rajiv Malhotra)

Leave a Reply