இந்து நற்செய்தி (Tamil)

Hindu Good News

இவ்வுலகம் பல மாற்றங்களின் தருவாயில் உள்ளது.  உலகமயமாக்கல், தேசிய எல்லைகளுக்கிடைய பெருகிவரும் இடம்பெயர்த்தல், மத பூசல்கள், சுற்றுபுறசூழலின் சவால்கள், வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் மற்றும் பன்முனைப்போக்கு உலகங்கள் எல்லாம் மாற்றுச் சிந்தணை ஒன்றே காலங்காலமாக மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் குழப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு தரவல்லது என்பதை உறுதி செய்கிறது.

இன்றைய சவால்களைத் தீர்ப்பதற்கு வழங்கப்படும் பல தீர்வுகள், சோர்வுடையதாக, நிகழ்காலத்திக்கு பொருந்தாத மற்றும் போதுமானதாகவும் இல்லை. இத்தீர்வுகலும், அவற்றை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களும், வடக்கத்திய உலகக் கண்ணோட்டதை முன்னிருத்தி உருவாக்கபட்டவை. இப்பார்வை கிட்டத்தட்ட ஐநூரு ஆண்டுகலாக உலக விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக ஐரோப்பிய – அமெரிக்க வரலாறுகள் , புராணங்கள், அறிவுசார் மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் இந்த உலகக் கண்ணோட்டம் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலம் மீண்டும் ஆசியா மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை  நோக்கி பார்க்கும் ஒரு தருணத்தில் நிற்கிறோம். நம்மில் பலர் உலகின் மாறுபட்ட குரல்களை ஓரம்கட்டலாம் – குறிப்பாக அவை நீண்டகால நம்பிக்கைகளுக்கு சவால் விடும் போது. அல்லது புதிய பரிமானங்களை நாம் ஒப்புக் கொள்ளலாம்- அவை மேற்கத்திய சலுகை பெற்ற நிலைக்கு சவால் விடுத்து, மேற்கத்தியர்களின் நலனுக்காக மட்டுமல்ல, எல்லா மனிதகுலத்திற்கும் உலகை புதிதாக வடிவமைப்பதற்கான அவர்களின் திறனை உறுதிப்படுத்துவாதல் .

கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் “நற்செய்தி” என்ற சொற்றொடரில் நாம் அனைவரும் கேள்விப்பட்ட பழைய முன்மாதிரிகளில் ஒன்று. (“நற்செய்தி” என்ற சொற்றொடர் ‘கசபெல்” என்ற வார்த்தையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.  இது பைபிளில் இயேசுவின் வாழ்க்கையின் விவரங்களைக் குறிக்கிறது.) கிறிஸ்தவ நற்செய்தி பொதுவாக கடவுள் தன்  ஒரே மகன், இயேசு கிறிஸ்துவை , மனிதகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரம் செய்வதர்க்காக சிலுவையில் பலியிடுவதன் மூலம் கடவுளின்  காப்பாற்றும் செயலுடன்  தொடர்புடையது.. ஆனால்  இந்துக்கள், அத்தகைய பிராயச்சித்தத்தை தேவையற்றதாகக் கருதுகின்றனர். மனிதன் பாவி அல்ல , தெய்வீகமானவன். நாம் ஒவ்வொருவரும், இயேசுவைப் போன்ற அதே ஆற்றலைக் கொண்டுள்ளோம்.  இந்த தெய்வீகத்தன்மையை இங்கேய  இப்பொழுதே – வேறொருவரின் கடந்த கால தியாகத்தின் தேவை இல்லாமல்  நமக்குள் உணரமுடியும். இந்த சக்திவாய்ந்த யோசனையை விளக்க, “இந்து நற்செய்தி” என்ற வார்த்தையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இத்தகைய நற்செய்தி இந்து நற்செய்தியின் ஒரு பார்வை மட்டுமே ™, இது மனிதனின் சொந்த திறன்களை உயர்த்துகிறது, கடவுள், மனிதன் மற்றும் அகிலத்தின் அத்தியாவசிய ஒற்றுமையை வலியுறுத்துகிறது, மேலும் ஒற்றுமையை விட பன்முகத்தன்மை என்பது யதார்த்தத்தின் உண்மையான புரிதல் என்று வலியுறுத்துகிறது. அத்தகைய உலகக் கண்ணோட்டத்தின் சில முக்கிய வாக்குறுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • வழக்கமான கிறிஸ்தவ அர்த்தத்தில் அசல் பாவம் என்று எதுவும் இல்லை. சத்-சிட்-ஆனந்த எனும்  சமஸ்கிருத வார்த்தையால் விவரிக்கப்பட்டுள்ளபடி நாம் அனைவரும் முதலில் தெய்வீக தன்மை உடையவர்கள்
  • கிறிஸ்தவம் மற்றும் பெரும்பாலான ஆபிரகாமிய மதங்கள் கூறுவதை போல் வரலாற்று தீர்க்கதரிசிகளும் மிசையாக்கலும் ஆன்மீக சத்தியத்தை அடைவதை கட்டுப்படுத்துவதில்லை. வரலாற்று ரீதியாக வடிவமைக்கப்பட்ட வகுப்புவாத அடையாளங்கள், இனங்கள், ரத்த வம்சாவழிகள்  மற்றும் சில வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலான மத தனித்துவத்தின் கூற்றுக்கள் உட்பட – வரலாற்றிலிருந்து சுதந்திரமான ஆன்மீக நிலையை அடைய யோகா மற்றும் அதன் தொடர்புடைய ஆன்மீக நடை முறைகள் நம்மை அனுமதிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் வரலாற்று தீர்க்கதரிசிகள் அல்லது அவர்களுக்குப் பிறகு உருவான அதிகார நிறுவனங்களை சார்ந்து இல்லை.
  • தர்மத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் எந்த அடிப்படை மோதலும் இல்லை. கடந்த காலங்களிலும் இருந்ததும் இல்லை.
  • மேற்கத்திய அண்டவியல் மற்றும் புராணங்களில் “குழப்பம்” பற்றிய பயம் தேவையில்லை. எதிர்மறை அர்த்தத்தில் பெரும்பாலும் குழப்பமானதாகக் கருதப்படுவது யதார்த்தத்தின் இயற்கையான மற்றும் இயல்பான வெளிப்பாடாகும். மனிதனின் அறிவாற்றலின் வரம்புகள் மட்டுமே இயற்கையின் சிக்கலை தவறாகப் புரிந்துகொள்கின்றன, அதை பயம் மற்றும் தீமை – நிர்மூலமாக்குவதற்கு தகுதியானவை என்று கருதுகின்றன.

இயற்கையை மதிக்கும்போது ஒரு ஆனந்தமான மனித வாழ்க்கை சாத்தியமாகும். “முன்னேற்றம்” அடைவதர்க்கு இயற்கையை அழிக்க வேண்டிய அவசியமில்லை – உண்மையில் நம்மை தக்கவைத்துக்கொள்ளும் இயற்கையை சீர்குலைக்காமல் இருந்தால், நமது சொந்த பரிணாம வளர்ச்சி விரைவுபடுத்தப்படும்.

  • நமது இறுதி ஆற்றலுக்கு நம்மை முன்னேற்றுவதற்கு எந்த மையப்படுத்தப்பட்ட மத அதிகாரமும் தேவையில்லை. கடந்த கால முன்மாதிரிகளின் கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகளை வழிகாட்டுதல்களாகப் பயன்படுத்தி நமது சொந்த பாதையை பரிசோதனை செய்து கண்டறியலாம்.
  • அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் மத்தியில் பரஸ்பர மரியாதை என்பது இந்து மதத்தில் ஒரு கொள்கை விஷயமாகும். இது “அரசியல் சரியான தன்மைக்கு” உருவாக்கபட்தததோ அல்லது வெளியில் இருந்து திணிக்கப்பட்டதோ அல்ல. வெவ்வேறு பாதைகளைப் பின்பற்றும் மற்றவர்களைப் பொறுத்துக்கொள்லும் “சகிப்புத்தன்மை” க்கு அப்பாற்பட்டது. தன்னுடைய மதமே தனித்தன்மை கொண்டது மற்றும் பிறரை தன்னுடைய மதத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நிர்பந்தங்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இந்த வலைத்தளம் https://beingdifferentbook.com இந்து நற்செய்தியின் குடையின் கீழ் இத்தகைய கருத்துக்கள், அனுமானங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய பலவிதமான கட்டுரைகள் மற்றும் விவாதங்களை வழங்குகிறது. இந்த இடுகைகள் இந்தியாவின் அனைத்து தர்ம மரபுகளான இந்து மதம், பவுத்தம், சீக்கியம் மற்றும் சமண மதம் ஆகியவற்றின் தத்துவ மற்றும் மனோதத்துவ பார்வைகளை உள்ளடக்கியது மற்றும் பிரதிபலிக்கின்றன. மேற்கூறியவற்றை எங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக்கொண்டு, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலமாகவும், ஒரு புதிய சகாப்த உறவுகள், நம்பிக்கை மற்றும் விஞ்ஞானத்திற்கு இடையிலான உறவுகள் மற்றும் மனிதகுலத்திற்கும் இயற்கையுக்கும் இடையிலான உறவுகள் ஆகியவற்றைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.

சமீபத்திய புத்தகம்,வேறுபட்டது: மேற்கத்திய யுனிவர்சலிசத்திற்கு ஒரு இந்திய சவால் (BEING DIFFERENT: An Indian Challenge to Western Universalism) (ஹார்பர்காலின்ஸ், 2011), இந்த உலகக் கண்ணோட்டம் யூத-கிறிஸ்தவ மற்றும் ஐரோப்பிய அறிவொளியை அடிப்படையாகக் கொண்ட மதச்சார்பற்ற மற்றும் பின்-நவீனத்துவ சிந்தனை உள்ளிட்ட பிரதான மேற்கத்திய சிந்தனையை விட எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஆராய்கிறது. .

Translation of – https://HinduGoodNews.com

Leave a Reply